காஞ்சிபுரத்தில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.3 கோடி மோசடி : ஊரை விட்டு ஓடிய குடும்பம்!!

23 November 2020, 7:45 pm
Crime Fraud - Updatenews360
Quick Share

காஞ்சிபுரம் : ஏலச்சீட்டு நடத்த மூன்று கோடி ரூபாய் சீட்டு பணம் மோசடி செய்து ஊரை காலி செய்த குடும்பத்தினரை போலீசார் தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் கோனேரிக்குப்பம் இந்திரா நகரை சேர்ந்தவர் தமிழ்செல்வி. இவர் தனது குடும்பத்தினர் சிவமூர்த்தி, சீனிவாசன், வசந்தா இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக சீட்டு பணம் தொழில் நடத்தி வந்துள்ளனர்.

சமீபத்தில் அப்பகுதியில் உள்ள 100 க்கும் மேற்பட்டவர்களிடம் 1 லட்சம், 2 லட்சம், 5லட்சம், 10 லட்சம் ரூபாய் என சீட்டு பணம் பெற்று கொண்டு ஏல சீட்டு நடத்தி வந்துள்ளனர். சுமார் 3 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து பணத்தை திருப்பி தராமல் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணத்தை செலுத்திய பொதுமக்கள் ஒன்றாக சேர்ந்து வந்து தங்களை ஏமாற்றிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்களுக்கு சேரவேண்டிய முழுத் தொகையை வாங்கி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து இவ்வழக்கு தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 1

0

0