ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ₹30 லட்சம் மோசடி : ஏமாந்தவரை துப்பாக்கி முனையில் கடத்த முயற்சி.. 4 பேர் கைது!!

13 July 2021, 2:53 pm
Kidnap Gang Arrest- Updatenews360
Quick Share

திருவள்ளூர் : ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் மோசடி செய்தவரிடம் நியாயம் கேட்க சென்ற பாதிக்கப்பட்டவரை துப்பாக்கி முனையில் மிரட்டி கடத்த முயன்ற கூலிப்படையை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் லியோ தாமஸ் பீட்டர். இவர் தனது உறவினர்களிடம் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி  ரூ.30 லட்சத்தை பணம் பெற்று, அந்த பணத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீநாத் (வயது 28) என்பவரிடம் கொடுத்துள்ளார்.

ஸ்ரீநாத் வேலை வாங்கித் தராமல் பணத்தையும் திருப்பி கொடுக்காமல் அலைக்கழித்து வந்துள்ளார். இந்நிலையில் லியோதாமஸ்பீட்டர் பணத்தை தருமாறு ஸ்ரீநாத் வீட்டுக்குச் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரிக்கு சென்றுள்ளார்.

அப்போது ஸ்ரீநாத் தனது நண்பர்களுடன் திருவள்ளூரில் உள்ளதாக கூற லியோ தாமஸ்பீட்டர் திருவள்ளூர்- ஆவடி நெடுஞ்சாலையில் ஸ்ரீநாத் இருப்பதாக தெரிந்து அங்கு சென்ற லியோ தாமஸ் பீட்டரை காரின் அருகில் வர கூறியபோது அவர் காரின் அருகில் செல்ல திடீரென காரில் இருந்து இறங்கிய கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை சேர்ந்த அரசகுமார், ராஜேஷ் எபினேசர், சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலை பகுதியை சேர்ந்த ராஜ்குமார் ஆகியோரும் கையில் இருந்த துப்பாக்கியை லியோ தாமஸ் பீட்டரின் நெற்றியில் வைத்து கடத்த முற்பட்ட போது அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டு திருவள்ளூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கூலிப்படையினரை துப்பாக்கி தோட்டாக்களுடன் பிடித்து அவர்கள் வந்த காரை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பந்தப்பட்ட ஸ்ரீநாத் என்பவர் மீது திருச்சி மாவட்டத்தில் 29 வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. விசாரணையில் மேலும் பல தகவல்கள் வரலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Views: - 110

0

0