திருப்பூர் அருகே தனியார் நிதி நிறுவனம் ரூ.5 லட்சம் மோசடி : பாதிக்கப்பட்டர்வகள் முற்றுகை!!

2 November 2020, 3:49 pm
Kopuram Chit Funds - Updatenews360
Quick Share

திருப்பூர் : தாராபுரத்தில் கோபுரம் சீட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிதி நிறுவனத்தில் ஐந்து லட்ச ரூபாய் பண மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் கோபுரம் சிட்ஸ் பிரைவேட் லிமிடெட் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பைபாஸ் சாலையில் பேருந்து நிலையம் அருகே கோபுரம் சிட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிதி நிறுவனத்தில் 50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை வாடிக்கையாளர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 2 மாதமாக வாடிக்கையாளர்களுக்கு முறையாக ஏலச்சீட்டு பணம் கொடுக்காமல் வாடிக்கையாளர்களை இழுத்தடித்து வந்தனர்.

ஒவ்வொருவரும் தல 1 லட்சம், 2 லட்சம் மற்றும் 50,000 என சீட்டுக்கு பணம் கொடுத்திருந்தனர். இந்நிலையில் ஏலச்சீட்டு முடிவதற்கு முன்னரே குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இரண்டு மாதமாக பணம் தராமல் கோபுரம் சிட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் இழுத்தடித்து வந்த நிலையில் இன்று நிறுவனத்திற்கு பணம் செலுத்திய வாடிக்கையாளர்கள் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறுகையில் தாங்கள் நிதி நிறுவனத்திற்கு அளித்த தொகையினை தற்போது வழங்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட 10 வாடிக்கையாளர்கள் இன்று மதியம் கோபுரம் சீட்ஸ் பிரைவேட் நிறுவனத்தை முற்றுகையிட்டனர். எங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை உடனடியாக தரவில்லை என்றால் எவ்வளவு நேரம் ஆனாலும் அலுவலகத்தை விட்டு செல்ல மாட்டோம் எனவும் தெரிவித்தனர்.

Views: - 19

0

0