பட்டா மாற்ற ரூ.5 ஆயிரம் லஞ்சம் : காட்டிக் கொடுத்த காட்சி.. சைலண்ட் மோடில் விஏஓ.. அதிர வைத்த அதிகாரிகள்!!!

Author: Udayachandran RadhaKrishnan
16 August 2023, 7:23 pm
VAO Arrest - Updatenews360
Quick Share

பட்டா மாற்ற ரூ.5 ஆயிரம் லஞ்சம் : காட்டிக் கொடுத்த வீடியோ… சைலண்ட் மோடில் விஏஓ.. அதிர வைத்த அதிகாரிகள்!!!

காஞ்சிபுரம் மாவட்டம் பினாயூர் அருகே உள்ள அரும்புலியூர் கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் மாரியப்பன். கிராம உதவியாளராக இருப்பவர் கவியரசன். இவர்கள் பினாயூர் கிராமத்தையும் கூடுதலாக கவனித்து வருகின்றனர்.

பினாயூர் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்ற விவசாயி பட்டா , மற்றும் உட்பிரிவு மாற்ற கடந்த ஜூலை மாதம் விண்ணப்பித்துள்ளார். மேலும் கிராம நிர்வாக அலுவலரை அணுகியுள்ளார். அப்போது குமாரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத குமார் இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் கலை செல்வன் அவர்கள் வழக்கு பதிவு செய்து , வேதிப் பொருட்கள் தடவிய பணத்தை குமாரிடம் கொடுத்து லஞ்சமாக கொடுக்கும்படி கூறினர்.

கிராம உதவியாளர் கவியரசனிடம் அந்தப் பணத்தை குமார் கொடுக்கும்போது ,அரும்புலியூர் வருவாய் அலுவலர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் மறைந்திருந்து கவியரசனையும், மற்றும் அங்கிருந்த கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பனையும் கைது செய்தனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் கலைச்செல்வன் தலைமையில் ஆய்வாளர்கள் அண்ணாதுரை மற்றும் கீதா ஆகியோர் பிடிபட்ட விஏஓ மற்றும் உதவியாளரிடம் பணத்தை கைப்பற்றி தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.

Views: - 284

0

0