கூட்டுறவு வங்கிகளில் போலி நகைகளை வைத்து ரூ.7 கோடி மோசடி : அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்!!
Author: Udayachandran RadhaKrishnan25 August 2021, 1:14 pm
சென்னை : சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 5 கூட்டுறவு வங்கிகளில் சிறு குறு நிறுவனங்களின் பெயரில் போலி நகைகளை வைத்து மோசடி நடந்துள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பயிர்க் கடன், நகைக் கடன் உள்ளிட்டவைகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது. அந்த முறைகேடுகள் களைந்தெறிந்த பிறகு நாங்கள் சொன்னது போல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என திமுக தரப்பில் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 5 கூட்டுறவு வங்கிகளில் சிறு குறு நிறுவனங்களின் பெயரில் போலி நகைகளை வைத்து மோசடி நடந்துள்ளதாக ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்தார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ சந்திரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,
தமிழ்நாடு தொழிலாக கூட்டுறவு வங்கியில் சிறு குறு நிறுவனங்கள் பெயரில் போலி நகைகள் வைத்து ரூ.7 கோடி மோசடி, போலி நகை தொடர்பாக தமிழகத்தில் 45 வங்கிகளில் ஆய்வு நடந்து வருகிறது என தெரிவித்தார்.
0
0