மரக்கடையில் புகுந்து ரூ.90 ஆயிரம் கொள்ளை : லுங்கி திருடனுக்கு வலை வீசும் போலீசார்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 June 2021, 9:42 pm
SAthy Theft- Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சை புளியம்பட்டியில் உள்ள மரக்கடை ஒன்றில் மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்து கல்லாவில் உள்ள 90 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிக் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சை புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சித்த மருத்துவர் சாகுல் ஹமீத். இவர் புஞ்சை புளியம்பட்டியில் இருந்து கோவை செல்லும் சாலையில் அமைந்துள்ள திரையரங்கு அருகே மரக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 28ம்தேதி இரவு நேரத்தில் இவருக்கு சொந்தமான மரக்கடைக்கு மறுநாள் காலை வழக்கம் போல் வந்த சித்தமருத்துவர் சாகுல் ஹமீது கடையில் உள்ள கல்லாப்பெட்டி உடைந்த நிலையில் அதில் இருந்த பணம் 90 ஆயிரம் ரூபாய் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து புஞ்சை புளியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சித்தமருத்துவர் சாகுல் ஹமீது கொடுத்த புகாரின் அடிப்படையில் பணத்தை திருடிச்சென்ற மர்மநபரை அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு தேடி வந்தனர்.

இந்நிலையில் சித்த மருத்துவர் சாகுல் ஹமீதின் மரக்கடையின் உள்ளே லுங்கி அணிந்து கொண்டு புகுந்த மர்ம நபர் ஒருவர் மரக்கடையின் உள்ளே இருந்த கல்லாவை இரும்பு கம்பியால் உடைத்து அதிலிருந்த பணத்தை திருடிச் செல்லும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது கிடைத்துள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் புஞ்சை புளியம்பட்டி காவல்துறையினர் பணத்தை திருடிச்சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Views: - 327

0

0