வரலாற்றை மறந்து உளறிய ஆர்.எஸ் பாரதி : பிரச்சாரக் கூட்டத்தில் சலசலப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
27 March 2021, 2:06 pm
RS Bharathi -Updatenews360
Quick Share

அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு பின்ன ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்ததை மறந்து சசிகலா முதலமைச்சரானதாக திமுக அமைப்பு செயலார் ஆர் எஸ் பாரதி உளறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வேட்பாளர்களை களமிறக்கிய தமிழக அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இந்த நிலையில் கொளத்தூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய திமுக எம்பி ஆர்எஸ் பாரதி திமுகவில் வாரிசு அரசியல் என்ற விமர்சனத்துக்கு பதில் அளிக்கும் வகையில் பேசினார்.

அப்போது அதிமுகவை எம்ஜிஆருக்கு பின்னர் முதலமைச்சராக அவரது மனைவி ஜானகி பதவியேற்றார் என்றும் சுட்டிக்காட்டினார். பின்னர் எம்ஜிஆருடன் 25 படங்களில் நடித்த நடிகை ஜெயலலிதாவும் அவருக்கு பின் சசிகலா தானே முதலமைச்சரானார் என்றும் பேசினார்.

ஜெயலலிதாவுக்கு பிறகு ஓபிஎஸ் தான் முதலமைச்சரானார் என்பதை மறந்து சசிகலாவை சுட்டிக்காட்டியதால் பிரச்சாரக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் பேசிய அவர், ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் வாரிசு இல்லாததால் அவர்களது வாரிசுகள் பதவிக்கு வரவில்லை என்றும், எடப்பாடி முதலமைச்சரானது ஒரு விபத்து என்றும் விமர்சனம் செய்தார்.

Views: - 86

0

0