ஆர்.எஸ்.எஸ் தலைவர் வருகை : சாலைகளை தூய்மையாக வைக்க உத்தரவிட்ட மதுரை துணை ஆட்சியர் அதிரடி நீக்கம்!!!

22 July 2021, 4:11 pm
RSS Suspend -Updatenews360
Quick Share

மதுரை : பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வரும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் 4 நாட்கள் தங்கவுள்ளதால் உச்சகட்ட பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக 4 நாட்கள் பயணமாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்பகவத் நாளை விமானம் மூலமாக மதுரை வருகிறார். மதுரை சத்யசாய்நகர் பகுதியில் உள்ள சாய்பாபா கோவில் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

ஆர்.எஸ்.எஸ்.தலைவரின் வருகையை முன்னிட்டு மதுரை விமானம் நிலையம் முதல் மாநகர் முழுவதிலும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவதோடு, ஆங்காங்கே வாகன தணிக்கைகளும் நடத்தப்பட்டு வருகிறது.

இதேபோல் அவர் தங்கும் விடுதிகளிலும் நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் மதுரை மாநகராட்சி சார்பில் விமானநிலையத்திலிருந்து அவர் கலந்துகொள்ளும் சாய்பாபா கோவில் அமைந்துள்ள சத்யசாய்நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைத்து தூய்மையாக வைக்கவும், தெரு விளக்குகளை பராமரிக்கவும், அவரின் வருகையின் போது சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும் என மாநகராட்சி மண்டல அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஆர்.எஸ்.எஸ் தலைவர் வருகை குறித்த பணிகள் தொடர்பாக மதுரை மாநகராட்சியின் உத்தரவு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், மாணிக்தாகூர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த உத்தரவை பிறபித்த மதுரை மாநகராட்சி மண்டலம் 4ன் உதவி ஆணையாளராக பணிபுரிந்த சண்முகத்தை மாநகராட்சி பணியில் இருந்து விடுவித்து மதுரை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 99

0

0