மதுரையில் குழந்தைகள் பருகும் பிரபலமான குளிர்பானத்துக்குள் ரப்பர் பொருள் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக மதுரையில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் குளிர்பானங்களின் விற்பனை தற்போது சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அருகே உள்ள ஒரு கடையில் மதிச்சியம் பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவர், தனது குழந்தை பருகுவதற்காக பிரபலமான குளிர்பானம் ஒன்றை வாங்கி உள்ளார்.
மேலும் படிக்க: நாடாளுமன்ற தேர்தலில் திமுக ‘டாப்’…. 2026 தேர்தலில் கலக்கப் போகும் விஜய் கட்சி ; வெளியானது கருத்துக்கணிப்பு..!!
அந்த குளிர்பான பாட்டிலினுள் வாசர் ரப்பர் போன்ற பொருள் ஒன்று கிடந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனைத் தொடர்ந்து, குளிர்பான விநியோக மேலாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது, முறையாக பதில் ஒன்றும் அளிக்காமல் முரண்பாடாக பேசி உள்ளார். மேலும், ‘லீகலா மூவ் பண்ணி முடிஞ்சத பாத்துக்கோங்க’ என்று சவால் விடுக்கும் வண்ணம் பேசியுள்ளார்.
மேலும் படிக்க: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யனும்… தகுதியே இல்லாதவர் அனிதா ராதாகிருஷ்ணன் ; பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன்
இந்நிலையில், தங்கராஜ் தற்போது தனது நண்பர்கள், வழக்கறிஞர்கள் மூலம் இதனை மதுரை உணவுத்துறை அதிகாரியின் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளார். மேலும், குழந்தைகள் விரும்பி பருகும் பிரபலமான பாரம்பரிய குளிர்பானத்தில் குழந்தைகளின் உயிரை பறிக்கும் வகையில் ரப்பர் பொருள் கிடப்பதை முறையாக சோதனை செய்யாமல், விற்பனைக்கு கொண்டு வந்த குளிர்பானம் நிறுவனம் மீது வழக்கு தொடர போவதாகவும் கூறியுள்ளார்.
குழந்தைகள் விரும்பி பருகும் பிரபலமான குளிர்பானத்திற்குள் ரப்பர் பொருள் கிடந்த சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.