உள்ளாட்சித் தேர்தல்: பறக்கும் படை அமைக்க உத்தரவு

Author: Udhayakumar Raman
21 September 2021, 10:14 pm
Quick Share

சென்னை: திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நடக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை கண்காணிக்க பறக்கும் படை அமைக்கும்படி மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய நிலையில், வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், தேர்தல் நடைபெற உள்ள ஒன்பது மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அதில், ஒரு செயற் குற்றவியல் நீதிபதி மற்றும் 2 அல்லது 3 காவலர்கள் கொண்ட பறக்கும் படை அமைக்க வேண்டும். மூன்று ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கிய தொகுப்பிற்கும் ஒரு பறக்கும் படை இடம் பெற வேண்டும். உரிய ஆவணங்களின்றி ரூபாய் 50,000- க்கு மேல் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்ய வேண்டும். பறக்கும் படைகளின் ஆய்வு, பறிமுதல் செய்யப்படும் நிகழ்வுகள் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Views: - 139

0

0