காக்கை கூட்டத்திடம் சிக்கித்தவித்த அரியவகை ஆந்தை: பத்திரமாக மீட்ட பள்ளி மாணவிக்கு குவியும் பாராட்டு!!

Author: Rajesh
21 February 2022, 10:56 am
Quick Share

பொள்ளாச்சி: கோட்டூரில் காக்கைகளிடம் சிக்கித் தவித்த ஆந்தையை மீட்ட பள்ளி மாணவிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள கோட்டூர் உப்பு கிணறு வீதியை சேர்ந்தவர்கள் சுதர்சினி, தன்வந்த், வருண். இவர்களுக்கு நேற்று பள்ளி விடுமுறை என்பதால் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது அவ்வழியாக பறந்து வந்த ஆந்தையை காகங்கள் துரத்தி துரத்தி கொத்துவதை பார்த்துள்ளனர்.

இதனை கண்ட சிறுவர்கள் உடனடியாக காக்கைகளை விரட்டி பாதுகாப்பாக மீட்கப் போராடினார். அப்பொழுது பிரியதர்ஷினி என்ற பத்தாம் வகுப்பு மாணவி காகங்கள் பிடியிலிருந்து ஆந்தையை பத்திரமாக மீட்டு அதற்கு நீர் புகட்டி ஆழியார் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

வனத்துறையினர் ஆந்தையை வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர். காகங்களிடம் சிக்கிய ஆந்தையை மீட்ட சிறுமியின் செயலைக் கண்டு இப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Views: - 372

0

0