கோவையில் பெரியார் சிலைக்கு செருப்பு மாலையுடன் காவிப் பொடி : குற்றவாளியை தேடும் காவல்துறை!!

Author: Udayachandran RadhaKrishnan
9 January 2022, 5:04 pm
Periyar Idlo Insult -Updatenews360
Quick Share

கோவை : பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து, காவி பொடி தூவியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வெள்ளலூர் பகுதியில் செயல்பட்டு வரும் தந்தை பெரியார் பகுத்தறிவு படிப்பகத்தின் முன் பெரியார் சிலை உள்ளது. இந்த நிலையில் இன்று அந்த பெரியார் சிலைக்கு மர்மநபர்கள், செருப்பு மாலை அணிவித்தும், காவி நிற பொடி தூவியும் சென்றுள்ளனர்.

இதனால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து, பெரியார் படிப்பக நிர்வாகிகளுக்கு தகவல் தெரித்துள்ளனர்.

இதனையடுத்து, அங்கு வந்த நிர்வாகிகள், போத்தனூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.இதனிடையே, பெரியார் சிலையை அவமதித்தற்காக அங்கு திரண்ட திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததை அடுத்து ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இதனையடுத்து,அப்பகுதியில் ஏதேனும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும் இரவு நேரத்தில் அப்பகுதியில் யாரேனும் இருந்தார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் வேளையில், இது போன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 302

0

0