234 தொகுதிகளிலும் களமிறங்கும் புதிய பார்வை கூட்டணி : சக்திவேல் அறிவிப்பு

6 March 2021, 3:46 pm
Quick Share

கோவை: தமிழகத்தில் கொள்கை மற்றும் செயல்திட்டங்கள் அடிப்படையில் புதிய மாற்றத்தை உருவாக்கும் வகையில் வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் புதிய பார்வை கூட்டணி களம் காண உள்ளதாக அந்த அணியின் முதல்வர் வேட்பாளர் சக்திவேல் கோவையில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் முக்கிய கட்சிகளிடையே கூட்டணி மற்றும் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் முன்னனி கட்சிகளுக்கு மாற்று சக்தியாக தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்குவோம் எனும் உறுதிமொழியோடு புதிய பார்வை கூட்டணி உருவாகியுள்ளது.

தமிழக முற்போக்கு மக்கள் கட்சி தேசிய மக்கள் கட்சி இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சி என மூன்று கட்சிகள் இணைந்து புதிய பார்வை கூட்டணி எனும் புதிய அணி அமைத்துள்ளனர் இதில் முதல்வர் வேட்பாளராக சக்திவேல் துணை முதல்வர் வேட்பாளர்களாக ரவி மற்றும் வீரா சிதம்பரம் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவையில் நடைபெற்றது இதில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் தலைவரும் புதிய பார்வை கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான சக்திவேல் பேசுகையில், கொள்கை மற்றும் செயல்திட்டங்கள் அடிப்படையில் மாற்றங்கள் உருவாக்குவதெற்கென இந்த அணி அமைக்கப்பட்டு 234 தொகுதிகளிலும் எங்கள் அணி வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட போவதாக தெரிவித்தார். தொடர்ந்து புதிய பார்வை அணியின் கோவை,நீலகிரி மாவட்டங்களுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

Views: - 40

0

0