பொதுமக்கள் கூடும் பகுதிகளில் கஞ்சா விற்பனை : தப்பியோட முயற்சி செய்தவர் கைது

By: Udayachandran
16 October 2020, 10:57 am
Ganja Arrest- Updatenews360
Quick Share

சென்னை : மாதவரம் பால் பண்னை பகுதியில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மாதவரம் பால் பண்ணைக்கு குட்பட்ட 200 அடி சாலை பாலசுப்பிரமணியம் நகர் பகுதியில், கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாதவரம் பால் பண்ணை காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது .

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு மாறு வேடத்தில் சென்ற ஆய்வாளர், கஞ்சா வாங்குவது போல் விற்பனையில் ஈடுபட்ட நபரை வரவழைத்தனர். காவலர்கள் போன்று இருப்பதை அறிந்து சுதாரித்து ஓடிய போது ஆய்வாளர் மற்றும் காவலர்கள் அவரை விரட்டி பிடித்ததாக கூறப்படுகின்றது.

மேலும் விசாரணையில் ரெட்டேரி பகுதியை சேர்ந்த பாலாஜி (வயது 40) என்பதும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது . இதனையடுத்து அவரிடம் இருந் 1.5 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த மாதவரம் பால்பண்ணை போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Views: - 41

0

0