கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை ஸ்டேம்ப் விற்பனை : ரூ.10 லட்சம் மதிப்பில் போதை பொருட்கள் பறிமுதல்.. கோவையில் அடுத்த அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
20 August 2022, 7:55 pm
Drug Stamp - Updatenews360
Quick Share

கோவை புறநகர் பகுதிகளில் போதை ஸ்டேம்ப் விற்பனை செய்த ஒருவரை போலீசார் கைது செய்து 10 லட்சம் மதிப்பிலான 302 ஸ்டாம்ப்புகளை பறிமுதல் செய்தனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரை, ஸ்டாம்புகள், கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் மேற்கொண்ட ரோந்து பணியின் போது கார் ஒன்றை சோதனை செய்த போது அதில் ரூ.10 லட்சம் மதிப்பிலான 302 போதை ஸ்டாம்புகள், மாத்திரை மற்றும் 1.5 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து காரில் வந்த கேரளாவை சேர்ந்த சிவராமன் என்பவரை போலீசார் கைது செய்தனர். போலிசாரை பார்த்ததும் தப்பிச் சென்ற அருண் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Views: - 217

0

0