5 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை : 12 மாவட்டங்களில் தூறலுக்கு வாய்ப்பு..!
29 September 2020, 4:02 pmசென்னை : சேலம், திருச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், திருச்சி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
தென் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யும். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். புறநகர் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.