சேலத்தில் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களினால் நேர்ந்த கதி..! ஒரு கிராமமே தனிமைப்படுத்தப்பட்ட அவலம்..!

30 June 2020, 4:05 pm
Mettur dam - updatenews360
Quick Share

சேலம் : மேட்டூர் அருகே இறுதிச்சடங்கில் பங்கேற்ற ஒரே கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா சேலத்திலும் விறுவிறுவென பரவி வருகிறது. இதுவரையில் அங்கு மட்டும் 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 300க்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், எஞ்சியவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக்கல்லூரியின் மாணவர்கள் 5 பேர் உள்பட 109 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், கடந்த 21ம் தேதி மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் பண்ணவாடியில் செல்வம் என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட 2 மருத்துவர்கள் உள்பட 4 பேருக்கு கொரோனா முதலில் உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட சோதனையில் இறுதிச்சடங்கில் பங்கேற்ற ஒரே கிராமத்தை சேர்ந்த 58 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அந்த கிராமமே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Leave a Reply