சேலத்தில் சிலிண்டர் வெடித்து பயங்கர விபத்தில் பெண் பலி : 5 வீடுகள் இடிந்து சேதம்.. 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!

Author: Babu Lakshmanan
23 November 2021, 10:13 am
Quick Share

சேலம் அருகே சமையல் சிலிண்டர் வெடித்து சிதறியதில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

கருங்கல்பட்டி பாண்டுரங்கன் தெருவில் பத்மநாபன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் இன்று காலை சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தல் அவரது வீடு மட்டுமின்றி, சுற்றியிருந்த 5 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்து சேதமடைந்தன.

இந்த இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புப்படையினர், போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் ராஜலெட்சுமி என்ற பெண் உயிரிழந்துள்ளார். மேலும், இடிபாடுகளுக்குள் சிக்கிய 10க்கும் மேற்பட்டோரை படுகாயங்களுடன் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Views: - 296

0

0