வாலிபர் கல்லால் அடித்துக் கொலை : பதற வைத்த வீடியோ !!
5 September 2020, 2:39 pmசேலம் : வாலிபரை கல்லால் தாக்கிய கொலை செய்த கும்பலை சிசிடிவி காட்சியின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் அருகே கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த அகமது பாஷா என்பவர் சேலம் டவுன் பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அடிக்கடி வரும் களரம்பட்டியை சேர்ந்த சதீஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் இருவருக்கும் சில பிரச்சனைகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில சென்று கொண்டிருந்த அகமது பாஷாவை வழி மறித்த சதீஷ் மற்றும் அவரது நண்பர்கள் அவரிடம் வாக்குவாததில் ஈடுபட்டனர்.
சதீஷ் மற்றும் அவரது நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. அப்போது பேசிக்கொண்டிருந்த போது ஒருவர் பாஷாவின் தலைமீது கல்லால் கடுமையாக தாக்கினார். இதில் அவர் நிலை குலைந்து கீழே விழுந்தார்.
ஆனால் அந்த கும்பல் தொடர்ந்து அகமது பாஷாவை கல்லால் சரமாரியாக தாக்கினர். அதில் நிலைகுலைந்து போன அகமது பாஷா சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். உயிருக்கு போராடிய அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இருப்பினும் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அகமது பாஷா உயிரிழந்தார். இந்த நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர். பதற வைத்த வீடியோ காட்சிகளில் இடம்பெற்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0
0