சலூன் கடைகள் இன்று மற்றும் நாளை இயங்கலாம் : தமிழக அரசு அறிவிப்பு!!

8 May 2021, 11:34 am
Saloon Shop- Updatenews360
Quick Share

தமிழகத்தில் வரும் மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்த உள்ள நிலையில்,சலூன் கடைகள் இன்று மற்றும் நாளை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகிறது.

இந்த நிலையில் தமிகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் இன்று மற்றும் நாளையும் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. குறிப்பாக சலூன் கடைகள் இன்று மற்றும் நாளை மட்டும் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பால், மளிகை கடை, காய்கறிகடை, இறைச்சிக் கடை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே ஊரடங்கு நாட்களில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதே போல ஊரடங்கு நேரத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Views: - 175

0

0