தமிழகம்

நா பேச மாட்டேன்…என் BALL-தான் பேசும்…சீண்டிய சாம் கான்ஸ்டஸுக்கு மாஸ் பதிலடி கொடுத்த பும்ரா..!

பவுலிங்கில் மிரட்டிய பும்ரா வாயடைத்து போன சாம் கான்ஸ்டாஸ்

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.இத்தொடரின் 4 வது போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் இளம் வீரராக களமிறங்கிய சாம் கான்ஸ்டாஸ்,போட்டி ஆரம்பம் முதலே இந்திய வீரர்களை உசுப்பெடுத்தி கொண்டே இருந்தார்.

அவருக்கு அந்த போட்டி தான் முதல் சர்வேதேச டெஸ்ட் போட்டி,ஆனால் முன்னணி வீரர் போல மைதானத்தில் நடந்து கொண்டார்.அப்போட்டியில் அவருக்கும் விராட்கோலிக்கும் இடையே நடந்த மோதல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.அதோடு அவர் மைதானத்தில் பீல்டீங் பண்ணிக்கொண்டிருக்கும் போது ரசிகர்களை பார்த்து, கைகளை மேலே தூக்கி தூக்கி கரகோசங்களை எழுப்புங்கள் என்று சைகை காட்டிக்கொண்டே இருந்தார்.

மேலும் அவர் பும்ராவின் பந்துகளை நான் சிதறிடிப்பேன்,அதுதான் என்னுடைய குறிக்கோள் என பேட்டி அளித்தார்.ஆனால் இந்திய ரசிகர்களுக்கு ஆச்சர்யம் அளிக்கும் விதமாக அப்போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது.

இதையும் படியுங்க: மீண்டும் மீண்டுமா…கோட்டை விட்ட கோலி…தடுமாற்றத்தில் இந்திய அணி..!

இந்த நிலையில் சிட்னியில் இன்று நடைபெற்ற 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடி 185 ரன்களை மட்டுமே சேர்த்து.அதன்பின்பு ஆட்டத்தின் இறுதி நேரத்தில் ஆஸ்திரேலியா அணியின் உஷ்மான் கவாஜா மற்றும் சாம் கான்ஸ்டாஸ் களமிறங்கினார்கள்.அப்போது ஆட்டத்தின் 3-வது ஓவரை வீசிக்கொண்டிருந்தார் பும்ரா, அப்போது உஷ்மான் கவாஜா பேட்டிங் ஆட ரெடி ஆகாமல் நேரத்தை கடத்திக்கொண்டு இருந்தார்,ஆனால் இந்திய அணியோ இந்த ஓவரை வீசி அடுத்த ஓவரும் வீசலாம் என்று யோசித்தது.

இதனால் உஷ்மான் கவாஜாவை பார்த்து சீக்கிரம் ரெடி ஆகு என்று பும்ரா சைகை காட்டினார்.அப்போது எதிர்முனையில் இருந்த சாம் கான்ஸ்டாஸ் தேவையில்லாமல் பும்ராவிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்,பின்பு நடுவர் இருவரையும் சமாதானப்படுத்தி ஆட்டத்தை ஆடுமாறு சொன்னார்.

அந்த ஓவரில் பும்ரா வீசிய ஆட்டத்தின் இறுதி பந்தில் கவாஜா,கே எல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து தன்னுடைய விக்கெட்டை பறிகொடுப்பார்.அப்போது பும்ரா மற்றும் இந்திய வீரர்கள் ஆக்ரோஷமாக சாம் கான்ஸ்டசின் முன் தங்களுடைய சந்தோசத்தை வெளிப்படுத்துவார்கள்.

இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ள நிலையில் இந்திய ரசிகர்கள் பும்ராவை புகழ்ந்து வருகின்றனர்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.