குணத்துல தங்கம் சார்.. மக்கள் மனதை வென்ற சமந்தா.. பலரும் அறியாத தகவல்..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. அப்படி பிரபல நடிகையாக இருந்தாலும், அடிக்கடி பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இருந்தாலும், வெளியே தெரியாத அளவுக்கு சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

நடிகர் நாகசைதன்யாவுடன் விவாகரத்துக்கு பிறகு, சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். ‘புஷ்பா’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஒ அண்ட்டா வா மாவா’ என்ற பாடல் இந்தியா முழுவதும், அவரை பிரபலமாக்கியது. தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது, ரசிகர்களின் கனவு கன்னியாக இருக்கும் சமந்தா, ஒரு சமயத்தில் ஆயிரம் ரூபாய்க்காக திருமண மண்டபத்தில் பன்னீர் தெளிக்கும் வேலையை செய்திருக்கிறாராம். அதன் பிறகு தான் மாடலிங் செய்து சினிமா துறைக்குள் வந்துள்ளார். அவர் நடித்த முதல் தெலுங்கு திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது. அதன்பிறகு தமிழிலும் பானா காத்தாடி போன்ற திரைப்படங்களில் நடித்து அவர் சிறிது சிறிதாக முன்னேறத் தொடங்கினார்.

அந்த சமயத்தில் அவருக்கு மணிரத்னம் இயக்கிய கடல் மற்றும் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஐ திரைப்படத்திலும் சமந்தாவுக்கு நடிக்கு வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால், அப்போது கடுமையான தோல் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா அந்த படங்களில் நடிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது. அதன் பிறகு சில மாதங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சமந்தா நன்றாக குணமடைந்து மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
அதன் பின்னர், 2012-ம் ஆண்டு ‘பிரதியுஷா’ எனும் தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்தார்.

தன்னைப் போன்று மக்கள் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்ற எண்ணத்தில் அவர் வசதி இல்லாத மக்களுக்கு பல மருத்துவ உதவிகளை செய்ய ஆரம்பித்தார். மேலும் இந்த நிறுவனம் நிறைய மருத்துவமனைகள் உடன் உடன்படிக்கை ஏற்படுத்தி அதன் பெயரில் வசதி இல்லாத மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் அவர் பெண்கள், குழந்தைகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பல சேவைகளை செய்து வருகின்றார். அதேநேரத்தில் உயிருக்காக போராடும் பல குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றும் நோக்கிலும் இந்த நிறுவனம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

ஆதரவற்ற முதியவர்களுக்கு கண் அறுவை சிகிச்சை முகாம் உட்பட பல இலவச மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்வதில் இந்த தொண்டு நிறுவனம் பல மருத்துவமனைகளுக்கு சப்போர்ட்டாக இருந்து வருகிறது. ரத்ததான முகாம்கள், இலவச இதய அறுவை சிகிச்சை போன்றவற்றிலும் சமந்தா ஆரம்பித்த இந்த நிறுவனம் தன்னால் இயன்ற உதவியைச் செய்து வருகிறது. அப்படி பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா பல சர்ச்சைகளில் சிக்கி வந்தாலும் வெளியே தெரியாத அளவுக்கு பல நல்ல விஷயங்களை மக்களுக்காக செய்து வருகிறார். இந்த நல்ல குணத்தால் தான் இன்று அவர் ஒரு முன்னணி நட்சத்திரமாக இருக்கிறார் என்று அவரைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

2 minutes ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

41 minutes ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

1 hour ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

2 hours ago

எங்க கூட்டணிக்கு விஜய் வந்தால் சிவப்பு கம்பளம் தயார்… பாஜக பகிரங்க அறிவிப்பு!

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…

3 hours ago

எங்கடா தாவுறது? நானே தவழ்ந்துட்டு இருக்கேன்- ரெண்டாவது நாளிலேயே புஸ்ஸுன்னு போன ரெட்ரோ?

கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…

3 hours ago

This website uses cookies.