தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த நாக சைதன்யா, சமந்தா நான்கு வருட திருமண வாழ்க்கைக்குப் பின்னர் ஒரு வருடத்திற்கு முன்பு தங்கள் விவகாரத்தை அறிவித்தனர். தற்போது இருவரும் படங்களின் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இதனிடையே, தனது முன்னாள் மனைவியை பிரிந்து ஒரு வருடம் கழித்து நாக சைதன்யாவுக்கு மீண்டும் காதலில் விழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகர் நாக சைதன்யா கடந்த சில வாரங்களாக நடிகை சோபிதா துலிபாலாவை டேட்டிங் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இருவரும் சமீபத்தில் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள சைதன்யாவின் புதிய வீட்டில் ஒன்றாகக் காணப்பதாகவும் அங்கு இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேஜர் படத்தின் படப்பிடிப்பின் போது இருவரும் ஒட்டலில் பலமுறை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது தெலுங்கு வட்டாரத்தில் இந்த செய்தி சென்சேஷன்ல் ஆக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாக சைத்தன்யா ரசிகர்கள் இது சமந்தா குழு செய்த வேலை என பதிவு போட அதற்கு சமந்தா தக்க பதிலடி கொடுத்துள்ளார். அதில், பெண்ணை பற்றி விஷயம் என்றால் அது உண்மை, ஆண் பற்றி வந்தால் அந்த பெண் தான் இப்படி ஒரு தகவல் பரப்புகிறார் என்பதா, கொஞ்சம் வளருங்கள். என பதிவிட்டிருந்தார். இப்போது ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, நான்கு வருட திருமண வாழ்க்கையை அவர்கள் முடித்துகொள்ள என்ன காரணம் என அப்போது இருந்தே பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. இருப்பினும் அவர்கள் உண்மையான காரணத்தை தற்போது வரை வெளியிடாமல் இருக்கின்றனர்.
இந்நிலையில் கரண் ஜோகர் தொகுத்து வழங்கும் காபி வித் கரண் 7 ஷோவில் சமந்தா பங்கேற்று இருக்கிறார். அதில், சமந்தா முதல்முறையாக தனது விவாகரத்துக்கு என்ன காரணம் என கூறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ஷோ அடுத்த மாதம் தான் வெளியாகிறது என்பதால் சமந்தா என்ன கூறி இருப்பார் என தற்போதே பரபரப்பு தொடங்கி இருக்கிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.