மன்னர் சாம்ராட் பிருத்விராஜின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் ‘சாம்ராட் பிருத்விராஜ்’. சந்திரபிரகாஷ் திவேதி இயக்கத்தில் அக்ஷய் குமார் நாயகனாக நடித்துள்ள இத்திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் நேற்று வெளியானது.
இந்தி வெளியிட்டை பொறுத்தவரை, ‘சாம்ராட் பிருத்விராஜ்’ அந்த படத்தின் வசூல் பாதிக்காதவாறு தான் சென்று கொண்டிருக்கிறது.ஆனால் தமிழ், தெலுங்கில் அந்தப் படத்திற்கு வரவேற்பு சுமாராகவே இருப்பதால், முதல் நாள் வசூல் மந்தமாக உள்ளது.
இதனால் ‘சாம்ராட் பிருத்விராஜ்’ பாக்ஸ் ஆபிஸில் 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ய முடியாமல் திணறி வருகிறது. இந்த படத்திற்கு போட்டியாக தமிழில் வெளியாகியுள்ள ‘விக்ரம்’ மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ள ‘மேஜர்’ திரைப்படங்களுக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் தான் இந்தி படம் அடிவாங்குகிறது என்று கூறப்படுகிறது.
இதனால் ‘சாம்ராட் பிருத்விராஜ்’ திரைப்படத்திற்கு அங்கு வரவேற்பு சுமாராகவே இருப்பதால், படம் நஷ்டமாகவே அதிக வாய்ப்புள்ளது. முதல் நாள் வசூல் ரூ.11 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வசூல் பெரியளவில் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமீபகாலமாக தென்னிந்திய மொழிகளில் ‘டப்’ செய்யப்படும் இந்தி மொழி படங்கள் சாதாரண வருவாயை ஈட்டுவதற்கே பெரும்பாடு பட வேண்டிய நிலை இங்கு இருக்கிறது. அந்த நிலையை, ‘சாம்ராட் பிருத்விராஜ்’ திரைப்படமும் சந்தித்து வருவதாக சினிமா வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.