குன்னூரில் சந்தன மரம் வெட்டி கடத்தல் : ஒருவர் கைது… இருவர் தலைமறைவு!!

Author: Udayachandran RadhaKrishnan
30 July 2021, 5:45 pm
Sandal Wood Smuggling -Updatenews360
Quick Share

நீலகிரி : குன்னூரில் சந்தனமரம் வெட்டி கடத்தலில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீசார் மேலும் இரண்டு பேரை தேடி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் குறிப்பிட்ட சில இடங்களில் சந்தனமரங்கள்  உள்ளன. இந்நிலையில்  கடந்த வாரம் குன்னூர் அருகே உள்ள உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட  நான்சச் சந்தக்கடை பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஒரு சந்தன மரத்தையும், மேலும் இதன் அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டங்களில் நான்கு  சந்தன மரங்கள் வெட்டிய நபர்களை வனத்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில்  குன்னூரை அடுத்த ஜோகி கொம்பையைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரை  கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், இவரின் கூட்டாளிகளான அதே பகுதியை சேர்ந்த நடராஜ் மற்றும் நாகராஜ் ஆகியோருடன் சேர்ந்து சந்தன மரங்களை வெட்டியது தெரியவந்தது.

இதையடுத்து பொன்னுசாமியை கைது செய்த வனத்துறையினர் தலைமறைவாக உள்ள மேலும் இருவரை  தீவிரமாக தேடி வருகின்றனர்.

Views: - 164

0

0