மய்யத்துடன் கைகோர்க்கும் சமத்துவம் : முதலமைச்சர் பற்றி பிறகு முடிவு… சரத்குமார் பேட்டி…!!

27 February 2021, 1:46 pm
Kamal - sarath kumar - updatenews360
Quick Share

வரும் சட்டப்பேரவை தேர்தலில் புதிய கூட்டணி உருவாக்க முயற்சித்து வரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து பேசினார்.

சட்டப்பேரவை தேர்தல் ஏப்., 6ம் தேதி நடக்கும் என நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய சமத்துவ மக்கள் கட்சியும், திமுக கூட்டணியில் இருந்து விலகிய இந்திய ஜனநாயகக் கட்சியும் புதிய கூட்டணியை உருவாக்கியது. இந்தக் கூட்டணிக்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், விஜயகாந்தின் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்கு சரத்குமார் அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் நேரில் சென்று கமல்ஹாசனை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, சட்டப்பேரவை தேர்தலுக்கான 3வது அணியை உருவாக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், “மக்களுக்கு நல்லது செய்வதற்காகத்தான் அரசியலுக்கு வந்தேன். நல்ல எண்ணம் கொண்டவர்கள் ஒன்று சேர்ந்தால், சிறப்பாக இருக்கும் என்பதற்காகவே கமல்ஹாசனை சந்தித்து பேசினேன். நல்லவர்கள் எல்லோரும் இணையலாம் என்று கமல்ஹாசன் கூறியதால் சிறப்பான கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். எங்கள் கூட்டணி வெற்றி பெற்ற பிறகே முதல்வர் யார் என்று முடிவு செய்ய திட்டமிட்டுள்ளோம்.

மரியாதை மற்றும் விகிதாசாரம் ஏதும் கிடைக்காததால், அதிமுக கூட்டணியில் இருந்து விலகினோம். காலில் விழுந்து கேட்கிறேன், தமிழக மக்கள் பணத்தை வாங்கிக்கொண்டு வாக்களிக்காதீர்கள், என்று கூறினார்

Views: - 19

0

0