பணத்துக்காக இப்படியா பண்ணுவீங்க.. பிரபல நடிகரை சர்ச்சையில் சிக்க வைத்த விளம்பரம்.!
Author: Rajesh26 June 2022, 6:05 pm
தமிழ் சினிமாவில் துணை நடிகர், வில்லன் என படிப்படியாக நடித்து, கதாநாயகனாக நட்சத்திர அந்தஸ்தைப் பிடித்து முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நடிகராக வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார் சரத்குமார்.
விளையாட்டிலும்,உடல் பயிற்சியிலும் ஆர்வம் கொண்ட சரத்குமார் கட்டுக்கோப்பான உடலமைப்பைப் பேணுவதிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இவருக்கு, 67 வயதாகிறது என்று சொன்னால் தான் தெரியும் அந்த அளவுக்கு உடலில் கவனம் செலுத்தி வருகிறார்.
ரசிகர்களால் சுப்ரீம் ஸ்டார் என்று அன்புடன் அழைக்கப்படும் சரத்குமார், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், அரசியல் பிரமுகர் என பன்முகத் தன்மைக் கொண்டு இருக்கிறார். இவர் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் உருவான ‘புலன் விசாரணை’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்தில் மூலமே தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார் சரத்குமார்.
சரத்குமார் சினிமாவில் நுழைந்து முப்பது ஆண்டுகளை கடந்துள்ள நிலையிலும், அதே உத்வேகத்துடன் சினிமாவில் நடித்து வருகிறார். தற்போது, நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு திரைப்படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வரும் வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தினம் தோறும் தமிழகத்தில்
— JSK.Gopi (Jayam.SK.Gopi) (@JSKGopi) June 22, 2022
பல உயிர்கள் பலியாகும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஒரு கட்சியின் தலைவரும் ஒரு பொறுப்புள்ள நடிகருமான சரத்குமார் அவர்கள் விளம்பரத்தில் வருவது மிகவும் வேதனையான ஒன்று.@realradikaa @realsarathkumar pic.twitter.com/pqUymS4gCT
இந்நிலையில், நடிகர் சரத்குமார் ஆன்லைன் ரம்மி விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் ரம்மி விளம்பரத்தில் நடித்துள்ளார். இது சோஷியல் மீடியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. லாட்டரி சீட்டு எப்படி அனைத்து வகையான மக்களின் உழைப்பை வாரிச் சுரண்டியதோ, அதன் நவீன வடிவம் தான் ஆன்லைன் ரம்மி விளையாட்டு. இந்த விளையாட்டை விளையாடி பலர் தங்களின் பணத்தை எல்லாம் இழந்து, என்ன செய்வது என்று தெரியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
இதனால் பல தரப்பினரும் ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடைசெய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நேரத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் எம்பி, எம்எல்ஏ என பல்வேறு பதவிகளை நீங்கள் வகித்துள்ளீர்கள், உங்களின் கருத்துக்கு இங்கே மதிப்பு உள்ளது. நீங்கள் இதுபோன்ற விளம்பரத்தில் நடித்தால் அது தவறான முன் உதாரணமாகிவிடும் என்று இணையவாசிகள் கூறியுள்ளனர்.
ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடிகர் சரத்குமார் நடித்துள்ளார். ~ செய்தி
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் உயிரிழந்தவர்கள், நடுத்தெருவுக்கு வந்த சாமனிய மக்கள் ஏராளம்னு தெரியவில்லையா?!
ஆன்லைன் ரம்மியை தடைசெய்ய குரல் கொடுக்குற நேரத்துல இப்படி வழி தவறி போகலாமா நாட்டாம?! @realsarathkumar pic.twitter.com/SBnlyejUJe— தமிழன் சத்யா (@tamilansathya02) June 21, 2022
மற்றொரு இணையவாசி, நடிகர்களே ரம்மி விளம்பரத்தில் நடிக்க மறுத்து வருகின்ற இந்த நேரத்தில், சரத்குமார் நடிகர் மட்டுமல்ல ஒரு கட்சியின் தலைவரும் கூட… கொஞ்சாமாவது சமுதாயத்தின் மீது அக்கறை இருந்தால் இதில் நடிச்சிருப்பாரா.? என பலர் இணையத்தில் கேள்விகளை கேட்டு வருகின்றனர்.
0
0