30-வயது இளைஞனை காதலிக்கும் கமலின் முன்னாள் மனைவி.? பரபரப்பான செய்தி.!

Author: Rajesh
14 May 2022, 6:33 pm

தமிழ் சினிமாவில் உலக நாயகனாக கலக்கிக் கொண்டிருப்பவர் கமல்ஹாசன். இவரது முதல் மனைவி சரிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு அவரை விட்டு பிரிந்து வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. நடிகை சரிகா தன்னுடைய ஐந்து வயதிலேயே சினிமாவில் நடிக்கத் தொடங்கியவர். 1967ம் ஆண்டு முதல் அதிக இந்தி படங்களில் நடித்துள்ளார். மேலும், Pயசணயnயை எனும் ஆங்கிலப் படத்தில் சரிகா நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வென்றுள்ளார்.

மேலும், கமல்ஹாசனின் ஹே ராம் படத்திற்கு சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான தேசிய விருதையும் பெற்றார். கமல் ஹாசன் ஜோடியாக டிக் டிக் டிக் படத்தில் சரிகா நடித்திருந்தார். அந்த படத்தின் போது தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டு 1988ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

கமல்ஹாசன் மற்றும் சரிகா தம்பதியினருக்கு பிறந்த மகள்கள் தான் ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன். பின் சிறிது காலம் பிரேக் எடுத்த சரிகா 1997ம் ஆண்டு மீண்டும் ஆக்ரி சங்குர்ஷ் எனும் இந்தி படத்தில் நடிக்க ஆரம்பித்தார். மேலும், 2003ம் ஆண்டு புன்னகை பூவே எனும் தமிழ் படத்தில் நடித்திருந்தார்.

இருந்தாலும் கமல்-சரிகா இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2004ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பிறகு சரிகா ஆங்கிலம், இந்திப் படங்களில் மட்டும் நடித்து வந்திருந்தார். அதுமட்டுமில்லாமல் 2014ம் ஆண்டு வந்த யுத் எனும் சீரியலில் அமிதாப் பச்சன் உடன் இணைந்து நடித்தார்.

தற்போது சரிகா ‘ஆழனநசn டுழஎந ஆரஅடியi’ என்ற ஆந்தாலஜி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் அமேசன் பிரைமில் நேற்று வெளியானது. இது ஆறு விதவிதமான காதல் கதைகளை கொண்ட படம்.

மேலும், இதில் வரும் குறும்படங்கள் விவகாரமாக இருந்தாலும் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆறு இயக்குநர்கள் இணைந்து வித்தியாசமான ஆறு காதல் கதைகளை இதில் விவரித்து இருக்கின்றனர். மேலும், இந்த ஆந்தாலஜியில் ‘மை பியூட்டிஃபுல் ரிங்கில்ஸ்’ என்ற குறும்படத்தில் கமலின் முன்னாள் மனைவி சரிகா நடித்து இருக்கிறார். இதில் 60 வயதான சரிகாவை 30 வயது இளைஞன் காதலிக்கிறான். இதுதான் இந்த திரைப்படத்தின் கதை.

படத்தில் கணவனை விபத்தில் பறிகொடுத்த சரிகா அவரின் நினைவுகளுடன் வாழ்ந்து வருகிறார். அப்போது குணால் என்ற இளைஞனுடன் நட்பு ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அந்த இளைஞன் சரிகாவிடம் தன் மனதில் இருக்கும் காதலை சொல்லி விடுகிறான்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சரிகா கடுமையாகக் கண்டிக்கிறார். ஆனால், சரிகாவின் மனது குணாலை தேடுகிறது. இது சரியா? தவறா? எனக்கு 60 அவனுக்கு 30 என பல கேள்விகள் சரிகா மனதுக்குள் வருகிறது. இறுதியாக சரிகா ஒரு முடிவு எடுத்து குணாலை மீண்டும் வீட்டுக்கு அழைக்கிறார்.

அதன்பின் ஒரு அழகான திருப்பத்துடன் கதை முடிகிறது. நீண்ட நாட்களுக்குப்பின் சரிகா திரையில் தோன்றி பட்டையை கிளப்பி இருக்கிறார். இந்த கதை விவகாரம் ஆன கதையாக இருந்தாலும் எந்த இடத்திலும் குறையில்லாமல் அதை அழகாக நடித்திருக்கிறார் சரிகா.

காதலுக்கும், காதலிப்பவருக்கும் வயது ஒரு தடையில்லை, ஒரே ஒரு வாழ்க்கைதான் இந்த வாழ்க்கையை மகிழ்ந்து வாழ்ந்து விட வேண்டும் என்பதை தான் மை பியூட்டிஃபுல் ரிங்கில்ஸ் குறும்படத்தில் அழகாக சொல்லி இருக்கிறார்கள்.

  • Bigg Boss பிக் பாஸ் பிரபலத்துக்கு வந்த ஆபாச வீடியோக்கள்… மர்மநபரின் போட்டோவை வெளியிட்டு புகார்!
  • Views: - 1774

    0

    1