சசிகலாவின் வரவேற்பு பேனர்கள் கிழிப்பு : கிருஷ்ணகிரி அமமுகவினர் அதிர்ச்சி…!!

8 February 2021, 4:17 pm
sasikala banner- updatenews360
Quick Share

கிருஷ்ணகிரியில் சசிகலாவின் வருகைக்கான வைக்கப்பட்ட வரவேற்பு பேனர்கள் கிழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, தண்டனை காலம் முடிந்து கடந்த ஜனவரி 27ம் தேதி விடுதலையானார். ஆனால், அதற்கு முன்பாகவே, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 31ம் தேதி டிஸ்சார்ஜ் ஆனார். பிறகு பெங்களூரூவில் உள்ள பண்ணை வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்த அவர், இன்று சென்னை திரும்பினார்.

இந்த சூழலில், அதிமுக கொடி கட்டிய காரில் இருந்து பெங்களூரூவில் இருந்து சென்னை புறப்பட்டார். ஆனால், அவரை தடுத்து நிறுத்திய போலீசார் காரில் இருந்த அதிமுக கொடியை அகற்றினர். பின்னர், அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்த வேறு ஒரு காரில் மேலும் தனது பயணத்தை தொடர்ந்தார். மேலும், அதிமுக கொடி பயன்படுத்தியது தொடர்பாக அவருக்கு நோட்டீஸும் அளிக்கப்பட்டுள்ளது.

வழிநெடுகிலும் அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பூத்தூவியும், ஆரத்தி எடுத்தும், பட்டாசுகளை வெடித்தும், ஆட்டம் பாட்டத்துடன் அவரை தொடர்ந்து வரவேற்றனர். மேலும், பல்வேறு இடங்களில் சசிகலாவை வரவேற்பு பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பேனரில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சசிகலாவை வரவேற்று வைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட பேனர்களை மர்ம நபர்கள் கிழிததுள்ளனர். இந்த சம்பவத்தால் அமமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், சசிகலா வருகையையொட்டி வைக்கப்பட்ட பேனர்கள் கிழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0