போயஸ் கார்டனுக்கு ரீ-என்ட்ரி கொடுத்த சசிகலா… பிரமாண்ட திட்டம்… 2 மணி நேரம் விசிட்…!!! (வீடியோ)

9 April 2021, 6:02 pm
Quick Share

சென்னை : போயஸ் கார்டனில் பிரமாண்டமாக தயாராகி வரும் வீட்டின் கட்டுமானப் பணிகளை சசிகலா பார்வையிட்டார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவதற்கு முன்பாக, சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தில் சசிகலாவும் வசித்து வந்தார். அவரது மறைவிற்கு பிறகு, சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றி தமிழக அரசு அறிவித்தது.

இதனிடையே, கட்சியும், ஆட்சியும் கையை விட்டு போன நிலையில், போயஸ் கார்டனில் சசிகலாவுக்கு பிரமாண்ட பங்களா தயாராகி வருகிறது. சிறையில் இருந்து வந்த உடன் அவர் அங்குதான் தங்க இருப்பதாக தகவல் வெளியாகியது. ஆனால், கட்டுமானப் பணிகள் முடிவடையாததால், உறவினரின் வீட்டில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில், சசிகலாவுக்காக தயாராகி வரும் வீட்டின் வளாகத்திற்கு உள்ளே இன்று 2 கார்கள் நுழைந்தன. காரில் இருந்து சசிகலா இறங்கினார். அவர், அங்கு நடந்து வரும் கட்டுமானப் பணிகளை சுமார் 2 மணிநேரம் பார்வையிட்டுள்ளார். பின்னர், அங்கிருந்து மீண்டும் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிவித்து விட்ட நிலையில், பிரபலங்கள் தங்கியிருக்கும் போயஸ் கார்டனில் குடிபுகுந்து, இனி எஞ்சிய காலத்தை கழிக்கலாம் என அவர் திட்டமிட்டுள்ளதாக அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டனர்.

Views: - 51

0

0