அரசு கட்டுப்பாட்டுல இல்லைன்னா என்ன..? மக்கள் மீது அரசு கவனம் செலுத்தனும்.. தேர்விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு சசிகலா ஆறுதல்

Author: Babu Lakshmanan
28 April 2022, 2:20 pm
Quick Share

தஞ்சை களிமேடு தேர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து விகே சசிகலா ஆறுதல் கூறினார்.

தஞ்சாவூர் அருகே களிமேட்டில் நேற்று அதிகாலை தேர்த்திருவிழாவின் போது உயர்மின் அழுத்தக் கம்பி தேரின் மீது உரசியதில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களின் உறவினர்களை வி.கே.சசிகலா நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- தமிழக அரசிற்கு இந்த கோவில் சொந்தம் இல்லை என்று அப்படி கூறக்கூடாது. தமிழ்நாட்டில் தான் இந்த கோவில் உள்ளது. தமிழக அரசுக்கு சொந்தம் இல்லை என்றாலும், இந்த நிகழ்ச்சி நடந்தது தமிழ்நாட்டில் தான். ஓட்டு போட்ட மக்கள் தான்.

எனவே இவர்கள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும். உரிய வரைமுறைகளை ஏற்படுத்தினால், வருங்காலங்களில் இதுபோல் உயிர் பலியை தடுக்க முடியும், என்றார்.

மேலும், எதிர்க்கட்சிகள் உருப்படியாக ஏதாவது சொல்ல வேண்டும் என்றும்,அதற்கு பதிலாக ஆக்கபூர்வமான செயலை சொல்வது தான் சிறந்தது, எனக் கூறினார்.

Views: - 503

0

0