அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என சசிகலா கூறியுள்ளார் : அமைச்சர் கடம்பூர் ராஜூ..

Author: Udayachandran RadhaKrishnan
30 March 2021, 4:44 pm
Kadambur Raju -Updatenews360
Quick Share

தூத்துக்குடி : அதிமுக விற்கு வாக்களிக்க வேண்டும் என்று மறைமுகமாக சசிகலா கூறியுள்ளார் என அமைச்சர் கடம்பூர் செ ராஜு கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜு கயத்தார் நகரப்பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்பதை கண்கூடாக பார்க்கிறோம். 10 ஆண்டுகளாக அதிமுக அரசு செய்த பல நல்ல திட்டங்கள் வழங்கியதால் மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.

அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.அதிமுக சொன்னால் செய்யும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது கடந்த காலத்தில் நாங்களும் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம். அதிமுக ஆட்சி அமைக்க வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் கடந்த பத்தாண்டுகளில் அரசின் அனைத்து திட்டங்களையும் அனைத்து மக்களுக்கும் பெற்றுக் கொடுத்துள்ளேன்.

சட்டமன்ற உறுப்பினர் நிதியை பயன்படுத்தி சட்டமன்ற தொகுதி உள்ள அனைத்து கிராமங்களிலும் காலத்திற்கும் நிற்கும் வகையில் திட்டங்களை மக்களுக்கு வழங்கிய காரணத்தினால் அனைத்து பகுதிகளுக்கும் திட்டங்கள் சென்று சேர்ந்திருக்கிறது.ஆகையால் தான் மக்கள் எங்களை எழுச்சியுடன் வரவேற்று இரட்டை இலைக்கு வாக்களிப்போம் என்று கூறிவருகின்றனர்.கோவில்பட்டி தொகுதியில் அதிமுகவின் வெற்றி தமிழகத்தில் பேசக்கூடிய அளவிற்கு சிறப்பான வெற்றியாக இருக்கும்.

அமமுக நிர்வாகி சி.ஆர்.சரஸ்வதி, டிடிவி தினகரன் போட்டியிட வேண்டும் என்று அமைச்சர் சொன்ன வேண்டுகோளை ஏற்று தான் அவர் இங்கு போட்டியிடுவதாக குறிப்பிட்டுள்ளதை குறித்து பேசிய அமைச்சர், நிச்சயமாக நான்தான் வேண்டுகோள் வைத்தேன். இந்த வேண்டுகோளை ஏற்ற மாதிரி 18 சட்டமன்ற உறுப்பினர்கள் பிரிந்து சென்ற போது டிடிவி தினகரனின் நண்பர்களாக இருந்து நாங்கள் சிலர் அவருக்கு வேண்டுகோள் வைத்தோம்.

ஒரு நிலைப்பாட்டை எடுக்க சொல்லி இருந்தோம். அந்த நிலைப்பாட்டை டிடிவி தினகரன் எடுத்து இருந்தால் அவருடைய நிலைமையே வேறு, மற்றவர்கள் பேச்சை கேட்டு தவறான முடிவு எடுத்தது காரணமாக ஆட்சிக்கு இடையூறு ஏற்பட்டது. இந்த நிலைமைக்கு டிடிவி தினகரன் தள்ளப்பட்டார்.

தேர்தலுக்குப் பிறகும் டிடிவி தினகரனுக்கு சில வேண்டுகோளை வைப்போம் அதை ஏற்றுக்கொண்டால் அவருக்கு இன்னும் நல்லது. .டிடிவி தினகரன் மட்டுமல்ல முகஸ்டாலின் வந்து போட்டியிட வேண்டும் என்றுதான் சொன்னேன்.ஏனெனில் தொகுதி மக்கள் மீது நான் வைத்திருக்கும் நம்பிக்கை. தொகுதி மக்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை தான் காரணம்.

10 ஆண்டு காலமாக நான் ஆற்றிய சாதனைகள் பணிகள் எனக்கு வெற்றியை தேடி தெரிகிறது.பிறகு நான் யாரைக் கண்டு பயப்பட வேண்டும் . யார் வேண்டும் என்று மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இரட்டை இலையில் வெற்றி பெற்று வந்தால் தான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைக்க முடியும். வேறு சின்னத்தில் வெற்றி பெறுபவர்கள் ஜெயலலிதா ஆட்சி அமைக்க முடியாது.

மீண்டும் ஜெயலலிதா ஆட்சி மலர வேண்டும் என்று சசிகலா அம்மையார் கூறியுள்ளது என்பது அனைவரும் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என்பதனை மறைமுகமாக கூறியுள்ளார் என்று பொருள். இரட்டை இலை வெற்றி பெற்றால்தான் ஜெயலலிதாவின் ஆட்சி இதைத்தான் சசிகலா மறைமுகமாக தெரிவித்துள்ளார் என்பது எங்களுடைய கருத்து.

சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார். எந்த இடத்திலும் இந்த சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஒற்றுமையாக இருக்க வேண்டும், தீயசக்தி திமுக வரக்கூடாது என்றுதான் கூறியுள்ளாரே தவிர இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறவில்லை.

அவர் கோவிலுக்கு வரும்போது சிலர் அவரை சென்று பார்க்கின்றனர். நாங்கள் கூட அவரை பார்ப்போம். சசிகலா மனசாட்சிப்படி அறிக்கை விட்டு உள்ளார். ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும் என்றால் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என்பதனை மறைமுகமாக அவர் கூறியுள்ளார்.

ஓ பன்னீர்செல்வம் நல்ல மனிதர் என்று பலமுறை சான்றிதழ் கொடுத்தவர் டிடிவிதினகரன். பெரியகுளத்தில் அவர் வெற்றிக்காக ஓபிஎஸ் பாடுபட்டார். இதை டிடிவி தினகரனை இப்படிப்பட்ட நிலையில் இன்று மாற்று பேசினால் யார் நாக்கு மாற்றி பேசுகிறது என்பதை டிடிவி தினகரன் கேள்விக்கு விட்டுவிடுகிறேன் என்றார்.

Views: - 78

0

0