எம்ஜிஆர் மனைவி செய்ததை போல சசிகலாவும் பெருந்தன்மையோடு செய்ய வேண்டும் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து!!

20 July 2021, 5:20 pm
Saikala Jayakumar -Updatenews360
Quick Share

ஜெயலலிதா தலைமையேற்க வி.என். ஜானகி விட்டுத் தந்ததுபோல சசிகலா விட்டுத்தர வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மதுசூதனின் உடல்நிலை கேட்டறிந்தார்.

அதே நேரத்தில் சசிகலாவும் மதுசூதனன் உடல்நிலை விசாரிக்க மருத்துவமனைக்கு வந்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பயன்படுத்திய அதிமுக கொடியுள்ள காரில் சசிகலா மருத்துவமனைக்கு வந்தார்.

இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத சசிகலா அதிமுக தனது குடும்பம் என்பது நகைப்புக்குரியது.

D jayakumar viral audio: #MeToo in Tamil Nadu: Fisheries minister D  Jayakumar faces heat over viral audio clip

அதிமுக கொடி கட்டிய காரில் சசிகலா செல்வதை ஏற்க முடியாது. அதிமுக கட்சி கொடியை பயன்படுத்த எந்த உரிமையும் இல்லாத அவர் கொடி கட்டுவது தேவையற்ற நடவடிக்கை என கூறினார்.

சசிகலா தடையாக இல்லாமல் பெருந்தன்மையோடு கட்சியை விட்டுக்கொடுக்க வேண்டும் என கூறிய ஜெயக்குமார், ஜெயலலிதா தலைமையேற்க வி.என். ஜானகி விட்டுத் தந்ததுபோல சசிகலா விட்டுத்தர வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், திமுக தந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற 5 லட்சம் கோடி தேவை அதை எப்படிதிரட்டப் போகிறார்கள் என்றும், திமுகவின் முதுகில் காங்கிரஸ் சவாரி செய்வது போல பாஜகவை நாங்கள் பயன்படுத்தவில்லை என்றும் கூறினார்.

Views: - 107

0

0