சசிகலாவை வரவேற்க பட்டாசு ஏற்றி வந்த கார்களில் தீவிபத்து : அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்ப்பு

8 February 2021, 1:37 pm
car fire 1- updatenews360
Quick Share

கிருஷ்ணகிரி : சசிகலாவை உற்சாகமாக வரவேற்பதற்காக பட்டாசுகளை நிரப்பிச் சென்ற கார்களில் தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, தண்டனை காலம் முடிந்து கடந்த ஜனவரி 27ம் தேதி விடுதலையானார். ஆனால், அதற்கு முன்பாகவே, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 31ம் தேதி டிஸ்சார்ஜ் ஆனார். பிறகு பெங்களூரூவில் உள்ள பண்ணை வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்த அவர், இன்று சென்னை திரும்பினார்.

இந்த சூழலில், அதிமுக கொடி கட்டிய காரில் இருந்து பெங்களூரூவில் இருந்து சென்னை புறப்பட்டார். ஆனால், அவரை தடுத்து நிறுத்திய போலீசார் காரில் இருந்த அதிமுக கொடியை அகற்றினர். பின்னர், அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்த வேறு ஒரு காரில் மேலும் தனது பயணத்தை தொடர்ந்தார். மேலும், அதிமுக கொடி பயன்படுத்தியது தொடர்பாக அவருக்கு நோட்டீஸும் அளிக்கப்பட்டுள்ளது.

sasikala car - updatenews360

வழிநெடுகிலும் அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். பூத்தூவியும், ஆரத்தி எடுத்தும், பட்டாசுகளை வெடித்தும், ஆட்டம் பாட்டத்துடன் அவரை தொடர்ந்து வரவேற்று வருகின்றனர்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி பகுதிக்கு அருகே சாலையில் பட்டாசுகள் வெடித்தபோது, பட்டாசுகளை ஏற்றி வந்த காரில் தீப்பொறி விழுந்ததில் தீவிபத்து ஏற்பட்டது. காரில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில், தீமளமளவென எரிந்தது. இதனால், கார் முற்றிலும் எரிந்து நாசமாகியது. அதிர்ஷ்டவசமாக இந்த தீவிபத்தில் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை.

Views: - 1

0

0