சசிகலா சென்ற கார் ஜெயலலிதாவின் கார் : டிடிவி தினகரன் கூறிய கருத்தால் சர்ச்சை!!

31 January 2021, 6:26 pm
TTV Dhinakaran- Updatenews360
Quick Share

கர்நாடகா : சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையான சசிகலா விக்டோரியா மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் ஆன நிலையில், அவரது காரில் அதிமுக கொடி பறந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து கடந்த 27-ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலையான சசிகலாகு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து டிடிவி தினகரன் உள்ளிட்ட குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் இருந்து தேவனஹள்ளியில் உள்ள PRESTIGE GOLFSHIRE விடுதிக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது சசிகலா சென்ற காரின் முகப்பில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது. சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை என தமிழக முதல்வர் உட்பட அமைச்சர்கள் பலரும் தெரிவித்து வரும் நிலையில் சசிகலா காரில் அதிமுக கொடி இருந்தது சர்ச்சைகளை எழுப்பியது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் கிடையாது. அதிமுகவை உரிமை கொண்டாட முடியாது என்றார்.

இந்நிலையில் அமமுக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில், “சசிகலாதான் அதிமுகவின் பொதுச்செயலாளர். அதிமுக கொடியை பயன்படுத்தும் அத்தனை அதிகாரமும் சசிகலாவிற்கு உள்ளது. அவர் பயன்படுத்திய கார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய கார்.

அமமுக தொடங்கியது அதிமுகவை மீட்டெடுக்கத்தான் என்றும், சென்னை திரும்பியதும் அதிமுக-வை மீட்டெடுக்கும் நடவடிக்கை தொடரும் என்றார்.

Views: - 0

0

0