சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி

21 January 2021, 10:33 pm
Quick Share

பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று பெங்களூரு அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சக்கர நாற்காலியில் வைத்து அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அவருக்கு சிறைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் இரவில் மீண்டும் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து அரவது நலம் விரும்பிகளும் ஆதரவாளர்களும் கேள்வி எழுப்பி அவருக்குப் பாதுக்காப்பு வழங்கவேண்டுமெனக் கோரினர்.

இந்நிலையில், இன்று மாலை சசிகலாவுக்கு தைராய்டு, நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனையால் பாதிகப்பட்டுள்ளதால் சசிகலா தற்போது விக்டோரியா மருத்துவமனையில் உள்ள ஐசியுவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அவருக்கு எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் சோதனையில்
கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Views: - 0

0

0