சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு : காவலர் தாமஸ் பிரான்சிஸ்-க்கு பரோல்!!

17 October 2020, 7:08 pm
Thomas Francis - Updatenews360
Quick Share

மதுரை : சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் காவலர் தாமஸ் பிரான்சிஸ்-க்கு பரோல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சாத்தான்குளம் தந்தை மகன் இறப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் காவலர் தாமஸ் பிரான்சிஸ் என்பவருடைய தகப்பனார் இறந்து விட்டார்..

இதனால் தந்தைக்கு இறுதி காரியம் செய்வதற்காக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பரோல் கேட்டு அவசர வழக்காக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உயர்நீதிமன்றம் நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வு விசாரித்தது.

இதையடுத்து காவலர் தாமஸ் பிரான்சிஸ் இன்று 17ஆம் தேதி முதல் 19ம் தேதி மாலை 6 மணி வரை பரோல் வழங்கி உத்தரவு பிறப்பித்தார். அதைத் தொடர்ந்து மத்திய சிறைச்சாலையில் பலத்த பாதுகாப்புடன் அவர் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்