சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : விசாரணை ஒத்திவைப்பு…!!

1 March 2021, 6:06 pm
Jayaraj Fenix -Updatenews360
Quick Share

மதுரை : சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணை வரும் மார்ச் 8ம் தேதிக்கு ஒத்தி வைத்து மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் – பென்னிக்கிஸ் கடந்த கடந்த ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர்கள் முத்துராஜ், காவலர்கள் செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது சிபிஐ தரப்பில் 2027 பக்கங்கள் கொண்ட குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி தாண்டவம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. முன்னதாக வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கடந்த 22ம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.

அப்போது ரகு கணேஷை வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளதால் குற்றச்சாட்டு பதிவு செய்வதற்கு ரகு கணேஷ் தரப்பு வழக்கறிஞர் ஆட்சேபனை தெரிவித்ததார். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததுடன் அன்றைய தேதியில் குற்றச்சாட்டு பதிவு தொடர்பான விசாரணை மற்றும் வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மனு மீதான விசாரணை மீண்டும் நடைபெறும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Views: - 15

0

0