சாத்தான்குளம் அருகே மற்றொரு சம்பவம் : இளைஞர் கொலையான சம்பவத்தில் காவல் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு!!

18 September 2020, 3:37 pm
Murder Case Filed Police - updatenews360
Quick Share

தூத்துக்குடி : சாத்தான்குளம் அருகே மீண்டும் பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை காரில் கடத்தி கொலை செய்த சம்பவத்தில் காவல் ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகிலுள்ள சொக்கன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த தனிஸ்லாஸ் என்பவரது மகன் செல்வன்(வயது 30). இவருக்கும் உசரத்துக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த மகராஜன் என்பவரது மகனும் அதிமுக பிரமுகருமான திருமணவேல் என்பவருக்கும் இடப்பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் இன்று வழக்கறிஞரை சந்தித்து விட்டு உறவினர் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற செல்வனை சிலர் காரில் கடத்தி சென்றுள்ளனர். அதனை தொடர்ந்து செல்வன் மர்மமான முறையில் தட்டார்மடம் அருகே உள்ள கடக்குளம் காட்டுப்பகுதியில் இறந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சாத்தான்குளம் டிஎஸ்பி காட்வின் ஜெகதீஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வன் உடலை மீட்டு திசையன்விளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்வனின் உறவினர்கள் இந்த மர்மமான மரணத்திற்கு தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் என்பவர் முழு உடந்தையாக இருந்துள்ளார் என்று குற்றம்சாட்டியுள்ளனர்.

நீண்ட நேரமாக செல்வனின் உறவினர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அதனை தொடர்ந்து செல்வனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

இதனைதொடர்ந்து திசையன்விளை காவல்நிலையத்தில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரி கிருண்ஷன் மற்றும் செல்வத்தின் உறவினர் திருமணவேல் உள்ளிட்டவர்கள் மீது 4 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். சாத்தான்குளத்தில் நடந்த இரட்டைக் கொலை வழக்கில் காவலர்கள் கைதாகியுள்ள நிலையில் மேலும் ஒரு சம்பவத்தில் காவல் ஆய்வாளர் மீது வழக்குபதிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 7

0

0