வாயில் வடை சுட்ட “சத்யா ஆண்ட்டி“ : மிரண்டு போன ராணிப்பேட்டை காவல்துறை!!
19 November 2020, 5:24 pmராணிப்பேட்டை : பேச்சால் மயக்கி வாயில் வடை சுட்டு பெண்களிடம் மோசடியில் ஈடுபட்ட சத்யா என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டையை சேர்ந்தவர்தான் சத்யா. பெயரில் மட்டும்தான் சத்யா, ஆனால் பேச்சில் சொக்க வைக்த்துவிடுவார். பெயரளவில் உள்ள சத்தியம் வாயளவில் இல்லாமல் போனதுதான் இவரின் மூலதந்திரம்.
வங்கியல் ஒரு லட்சம் முதலீடம செய்தால் ஒரு மாசம் கழித்து 600 ரூபாய், 700 ரூபாய் கிடைக்கும், ஆனா சத்யாவிடம் கொடுத்தால் 5 நாளைக்கு ஒரு முறை ரூ.3 ஆயிரம் வட்டி கிடைக்கும். அதில் 2 ஆயிரம் நமக்கு, ஆயிரம் ரூபாய் சத்யாவின் கம்பெனிக்கு.. இப்படிதான் அனைவரிடம் கூறி பெண்களை மதி மயங்க வைத்துள்ளார்.
பணம் மட்டுமல்ல 5 சவரன் நகை தந்தால், 10 நாளில் அந்த நகையை திருப்பி தரும்போது 5 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அதில் 3 ஆயிரம் உங்களுக்கு 2 ஆயிரம் கம்பெனிக்கு என கில்லாடி பேச்சால் கேடித்தனம் செய்து மோசடியை ஆரம்பித்துள்ளார் சத்யா.
இதை நம்பி ஏராளமான பெண்கள், லட்ச லட்சமாக பணத்தை கொடுத்தனர். ஆரம்பத்தில் சொன்னது சென்னபடியே நடந்து கெண்டு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார் சத்யா. உடனே சில பெண்கள் இதை நம்பி 10 லட்சம் ரூபாய் வரை சத்யாவிடம் கணவர்களுக்கு தெரியாமல் அள்ளிக் கொடுத்தனர்.
கல்லா கட்டியது சத்யா அனைத்தையும் சுருட்டிக் கொண்டு தலைமறைவானார். இதையடுத்து ஏமாந்து போன பெண்கள், புகார் கொடுத்தால் கணவர்மார்களுக்கும் தெரிந்து விடும் என பயந்து கொண்டிருந்தனர். இறுதியில் பெண்கள் சத்யாவை வலை வீசி தேடத் தொடங்கினர். ஒருவழியாக சிக்கிய சத்யாவிடம், பணம் குறித்து கேட்டதற்கு, பணமும் நகையும் காலியாகிவிட்டதாக கூறியுள்ளார்.
இதையடுத்து ராணிபேட்டை காவல்நிலையத்தில் சத்யா குறித்து மோசடி புகார் அளித்தனர். இந்த நிலையில் போலீசார் சத்யா சொன்ன வார்த்தையை கேட்டு ஆடிப்போய்விட்டார்கள் காரணம், அவருக்கு பின்னால் அரசியல் புள்ளிகள் இருப்பதாக கூறியுள்ளார்.
இதையடுத்து சத்யாவை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சத்யாவுக்கு பின்னால் இருக்கும் அரசியல் புள்ளிகள் யார் என்ற எதிர்ப்பார்பிலும் உள்ளனர்.
0
0