மிரட்டல் வழக்கில் ஜாமீன்… அவதூறு வழக்கில் 15 நாட்கள் காவல்… மீண்டும் சிறையில் சாட்டை துரைமுருகன்…!!

15 June 2021, 5:57 pm
sattai murugan - updatenews360
Quick Share

கரூர் : அமைச்சர் செந்தில் பாலாஜியை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சாட்டை துரைமுருகனை 15 நாட்கள் சிறை அடைக்க கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சியை சேர்ந்த யூடியூபர் சாட்டை முருகன், நாம் தமிழர் கட்சி மாநில இளைஞர் அணியை சேர்ந்தவர். இவர் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை பற்றி தவறாக பேசிய கார் உதிரி பாக கடைக்காரரை நேரில் சென்று மிரட்டிய சம்பவம் சர்ச்சையை கிளப்பியது. இதனால், சாட்டை முருகன் உட்பட 4 பேரை திருச்சி கே.கே.நகர் போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, குஷ்பு ஆகியோர் படத்தை அவதூறாக பயன்படுத்தியதாகவும், மைனர் குழந்தைகளின் புகைப்படத்தை பயன்படுத்தியதாகவும் சாட்டை துரைமுருகன் மீது மேலும் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், கார் உதிரி பாக கடைக்காரரை மிரட்டிய வழக்கில் துரைமுருகனுக்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. எனினும், கரூர், தஞ்சை வழக்குகளில் நீதிமன்ற காவலில் சாட்டை துரைமுருகன் வைக்கப்பட்டிருப்பதால், அவர் சிறையிலேயே இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர் செந்தில் பாலாஜி உத்தரவின் பேரில் மணல் அள்ளப்படுவதாக அவதூறாக பேசியதற்காகவும், சாட்டை துரைமுருகன் மீது கரூர் மாவட்ட திமுகவினர் அளித்த புகாரின் அடிப்படையில் இரண்டு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கரூர் சைபர் கிரைம் போலீஸார் சாட்டை துரைமுருகன் 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், சாட்டை துரைமுருகனுக்கு கரூர் குற்றவியல் நீதிமன்றம் எண் 2 நீதிபதி சுஜாதா, சாட்டை துரைமுருகனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டுள்ளதையடுத்து, சாட்டை துரைமுருகன் முசிறி கிளை சிறைக்கு மீண்டும் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்

Views: - 261

0

0