Categories: தமிழகம்

“கள்ளச்சாராய சாவுகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்”- நீதிமன்ற வளாகத்தில் கோஷமிட்ட சவுக்கு சங்கர்!

https://we.tl/t-pvWV5dx8gZ

சவுக்கு சங்கர் அலுவலகத்தில் பணிபுரிந்த கார்த்திக் என்பவர் மீது புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காவல் நிலையத்தில் மோசடி உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் அவருக்கு சொந்தப் ஜாமீன் வழங்கி நீதிபதி விஜயபாரதி உத்தரவு பிறப்பித்தார்.
ஜாமீன் கிடைத்த பிறகு போலீசார் அழைத்துச் சென்றபோது கள்ளச்சாராய சாவுகளுக்குப் பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். இதுவரை கள்ளச்சாராயத்தால் 40 பேர் உயிரிழந்துள்ளது தமிழக அரசின் கையாளாகாத்தனத்தை காட்டுகிறது என்று கோஷமிட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காவல் நிலையத்தில் சட்டக் கல்லூரி மாணவரான கார்த்தி என்பவர் ஒரு லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கின் போது கார்த்தி யூட்யூபர் சவுக்கு சங்கரின் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த மோசடி வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரையும் இரண்டாவது குற்றவாளியாக அறந்தாங்கி போலீசார் சேர்த்து வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று ஆலங்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி விஜயபாரதி, சவுக்கு சங்கருக்கு சொந்த ஜாமீர் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.
ஜாமீன் கிடைத்த பிறகு போலீசார் அழைத்துச் சென்ற போது சவுக்கு சங்கர் தமிழக அரசு தங்களை எதிர்த்து பேசுபவர்களை, அரசியல் எதிரிகளை பொய் வழக்கு போட்டு பழிவாங்குவதற்காக தான் காவல்துறையை வைத்துள்ளது.
தமிழக அரசு பொய் வழக்கு போடுவதில் செலுத்தும் கவனத்தை கள்ளச்சாராயத்தை ஒழிக்க மேற்கொள்ளாததன் விளைவு தான் 33 உயிர்களை பலி வாங்கியுள்ளது.
கள்ளச்சாராய சாவுகளுக்கு பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் இதுவரை தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இது தமிழக அரசின் கையாலாகாத தனத்தை காட்டுகிறது என்று முழக்கமிட்டார். அவர் கோஷம் விடுவதை தடுத்து போலீசார் சவுக்கு சங்கரை விரைந்து அழைத்துச் சென்றனர்

.

.

.

.

Sangavi D

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

1 day ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

1 day ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

1 day ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

1 day ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

1 day ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

1 day ago

This website uses cookies.