என் சாவுக்கு பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள்தான் காரணம் : அந்த பள்ளியை இழுத்து மூடுங்க.. வீடியோ வெளியிட்டு 9ம் வகுப்பு மாணவன் தற்கொலை!!

Author: Udayachandran RadhaKrishnan
23 August 2022, 3:28 pm
Chennai Suicide - Updatenews360
Quick Share

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக குடும்ப பிரச்சனை, கடன் தொல்லை, காதல் விவகாரம் என தற்கொலை செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக பள்ளிகளில் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழக்கும் சம்பவம் அவ்வப்போது அரங்கேறி வருவது வேதனையாக இருக்கிறது. இது குறித்து தமிழக அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் தற்கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில் சென்னை அம்பத்தூர் அருகே பாடி குமரன் நகரில் 9ஆம் வகுப்பு மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் தனது தற்கொலைக்கு தனியார் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களே காரணம் என மாணவன் வீடியோ வெளியிட்டுள்ளார்..
பள்ளியில் ஆசிரியர்கள் தினமும் அடித்து துன்புறுத்தியதால் தற்கொலை என வீடியோவில் மாணவன் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் என் மகனுக்கு பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து மன உளைச்சல் ஏற்படுத்தியுள்ளனர், வீட்டுப்பாடம் செய்யாததால் அனைத்து மாணவர்கள் முன்னிலையில் திட்டி, அடித்துள்ளார்கள் என மாணவனின் தந்தை சேகர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பள்ளி தாளாளர் ஆட்கொண்டான் மற்றும் வகுப்பு ஆசிரியர் பிரசன்னகுமாரி ஆகியோரிடம் கொரட்டூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Views: - 166

0

0