தொடர் கனமழை எதிரொலி: 16 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை

Author: kavin kumar
26 November 2021, 11:00 pm
School Open - Updatenews360
Quick Share

சென்னை: நாளை தொடர் கனமழை காரணமாக 16 மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் மூன்று நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், தென் தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் அதி கனமழை பொழியும் என்பதால் தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கடலோர மாவட்டங்களை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக நாகை, அரியலூர், நெல்லை, புதுக்கோட்டை, திருவாரூர், தூத்துக்குடி, பெரம்பலூர் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அவற்றை தொடர்ந்து தற்போது கடலூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளனர்.

Views: - 313

0

0