தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை : முழு விபரம்!!
Author: Udayachandran RadhaKrishnan25 November 2021, 7:04 pm
நாளை தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 12 மாவட்டங்களில் பள்ளிக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை தமிழகத்தில் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, அரியலூர், திண்டுக்கல, தேனி, பெரம்பலூர், தென்காசி மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து 12 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, புதுக்கோட்டை, அரியலூர், திண்டுக்கல்,தேனி, பெரம்பலூர், தென்காசி மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை அதி கனமழை எச்சரிக்கை விடுத்த நிலையில், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து வருகின்றனர். நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0
0