மே 1க்கு பிறகு தேவையில்லை : பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பால் ஆசிரியர்கள் குஷி..!!!

28 April 2021, 4:28 pm
school education - updatenews360
Quick Share

சென்னை : கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பள்ளி ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோன தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, பல்வேறு கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளும் வெளியிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

கல்வித்துறையை பொறுத்தவரை, பள்ளிகள் மூடப்பட்டு, மாணவர்களுக்கு வீட்டுக் கல்வி திட்டத்தின் கீழ் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதே நேரம், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சுழற்சிமுறையில் தொடர்ந்து பள்ளிக்கு வந்து மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளை கவனித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், மே 1ம் தேதி முதல் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வரத்தேவையில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நோய் தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிக்கும் வரை ஆசிரியர்கள் வீட்டில் இருந்தபடியே வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும், பிற வகுப்பு மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி மூலமாக பயிற்சிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Views: - 154

2

0