அரசு பஸ்ஸில் மாணவிகளின் ஆபத்தான படிக்கட்டு பயணம் : கூடுதல் பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுக்குமா..?

Author: Babu Lakshmanan
6 December 2021, 6:59 pm
Quick Share

கன்னியாகுமரி : போதிய அளவு பஸ் வசதி இல்லாததால், கூட்ட நெரிசலில் சிக்கி கல்லூரி மாணவிகள் பேருந்து படிக்கட்டில் ஆபத்தான பயணம் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது.

குமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தை அடுத்துள்ள பால்குளத்தில் அரசு கலைக் கல்லூரி ஒன்றும், அகஸ்தீஸ்வரத்தில் விவேகானந்தா கலைக் கல்லூரி ஒன்றும் உள்ளது. இந்த இரண்டு கல்லூரிகளிலும் குமரி மாவட்டம் மட்டுமல்லாது, நெல்லை மாவட்டம் கூடங்குளம், விஜயநாராயணபுரம், அமராவதி விளை, சிதம்பரபுரம், ஆவரைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான கல்லூரி மாணவிகள் படித்து வருகின்றனர்.

இவர்கள் அங்கிருந்து கல்லூரி வருவதற்கு அஞ்சுகிராமம் வருகின்றனர். பின்னர், மீண்டும் ஒரு பஸ் ஏறி கல்லூரிகளுக்கு செல்கின்றனர். அஞ்சுகிராமத்தில் இருந்து போதிய அளவு பஸ் வசதி இல்லாததால் மாணவிகள் கூட்டநெரிசலில் சிக்கி கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

மேலும், வேறு வழியின்றி பேருந்துகளில் படிகட்டில் நின்று ஆபத்தான பயணம் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பெரிதளவில் விபத்துகள் ஏற்படுவதற்குள் கல்லூரி மாணவிகளின் நலன் கருதி கூடுதலாக அவ்வழியாக பேருந்து இயக்க வேண்டும் என மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

Views: - 481

0

0