அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அழுகிய முட்டைகள் விநியோகம்… திருப்பூரில் பெற்றோர்கள் அதிர்ச்சி!!

Author: Babu Lakshmanan
27 October 2021, 5:48 pm
rotten eggs1 - updatenews360
Quick Share

திருப்பூர் : திருப்பூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அழுகிய நிலையில் இருந்த முட்டைகளை வழங்கியதால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலமாக மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் 9 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், தொற்று பரவல் நாளுக்கு நாள் கட்டுக்குள் வந்து கொண்டிருக்கும் நிலையில், நவ., 1ம் தேதி முதல் ஏனைய வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது.

முன்னதாக, ஊரடங்கினால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையிலும், அரசு சார்பில் மதிய உணவுத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் முட்டை, சுண்டல் உள்ளிட்ட சத்தான உணவுப் பொருட்களை மாணவர்களின் வீடுகளுக்கே வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களும் அதனை பெற்றுச் சென்று வீடுகளில் சமைத்து உண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், திருப்பூரில் அரசின் மதிய உணவு திட்டத்தின் கீழ் பள்ளிக் குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகளை வழங்கியதால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது தொடர்பாக பேசிய மாணவர்களின் பெற்றோர்கள், “தமிழகத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற முடிவில் மட்டுமே தமிழக அரசு இருந்து வருவதாக தெரிகிறது. மாணவர்களின் நலனின் அக்கறை கொள்ளும் தமிழக அரசு, அவர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் தரமானதாக வழங்கப்படுகிறதா..? என்பது குறித்து அடிக்கடி ஆய்வு நடத்த முன்வர வேண்டும். ஏற்கனவே, சுகாதார சீர்கேட்டிற்கு மத்தியில் மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், இதுபோன்று அதிகாரிகள் அலட்சியாக செயல்படுவது எங்களது குழந்தைகளின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் அபாயத்தை உருவாக்குகிறது.

மாணவர்களுக்கு அழுகிய முட்டைகளை வழங்கிய விவகாரம் தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என தெரிவித்தனர்.

Views: - 518

0

0