டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற கோரி பள்ளி மாணவி மனு

Author: Udhayakumar Raman
18 October 2021, 7:56 pm
Quick Share

அரியலூர்: பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி 6ஆம் வகுப்பு மாணவி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

அரியலூர் மாவட்டம் எருத்துக்காரன்பட்டி ஊராட்சியில் அரசு உதவி பெறும் நிர்மலா காந்தி நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளிக்கு அருகிலேயே டாஸ்மாக் மது கடை செயல்பட்டு வருகிறது. மேலும் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் மது பாட்டில்களை குடித்துவிட்டு பள்ளியில் உள்ளே தூக்கி எறிந்து விடுகின்றனர்.

இதனால் பாட்டிலில் உடைந்து காணப்படுவதாகவும் மதுக்கடை அருகே அமர்ந்து குடிப்பதாலும் கூட்டமாக நிற்பதாலும் அடிக்கடி சண்டை நிகழ்வதாகவும் பள்ளி வருவதற்கு மாணவர்கள் அச்சப்படும் சூழ்நிலை உள்ளதால் மதுக்கடையை அகற்றி தருமாறு இதுவரை பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை. தற்போதைய சூழலில் வரும் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் மதுக் கடைகளை அகற்றி மாணவர்கள் அச்சமின்றி பள்ளிக்கு வரவும் படிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தி தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் அப்பள்ளியில் ஆறாவது படிக்கும் மாணவி இளந்தென்றல் மற்றும் அவரது சகோதரர் மனு அளித்தனர்.

Views: - 158

0

0