ஆபத்தை உணராமல் ஆற்றை கடக்கும் பள்ளி மாணவர்கள் : எங்க ஊருக்கும் பாலம் கிடைக்காதா? மனு அளித்து கண்டுகொள்ளாத அதிகாரிகள்..!!

Author: Udayachandran RadhaKrishnan
12 September 2022, 6:32 pm
Students Cross Rivers - Updatenews360
Quick Share

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பட்டு இந்திரா நகர் உள்ளது. இந்த பகுதியில் மட்டும் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தரைப்பாலம் வேண்டுமென பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அன்றாட தேவைகளுக்காக வெளியூர் மற்றும் மருத்துவ தேவைக்காகவும், பள்ளி மாணவர்களும் இந்த முஸ்க்குந்தா நதியை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த ஆற்றை கடந்து செல்லும் பட்சத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மருத்துவமனைக்கு பள்ளிகளுக்கு மற்றும் ரேஷன் கடைகளுக்கு எளிதாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆற்றை கடக்காமல் சுற்றி செல்லும்போது சுமார் 11 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி 11 கிலோமீட்டர் சுற்றி செல்லும்போது பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காகவும் மருத்துவமனைக்கு ,பள்ளி செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருவதாக மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

எனவே மழைக்காலங்களில் முகுந்தா நதியில் இருந்து அதிகப்படியான தண்ணீர் செல்வதால் ஆபத்தான முறையில் அச்சத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். மேலும் மழைக்காலங்கள் வந்தால் உயர்மட்ட மேம்பாலம் இல்லாததால் எங்கள் கிராமத்தில் பல உயிரிகளை இழுந்திருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

மேலும் கிராமமக்கள் எளிதாக அன்றாட தேவைகள் மற்றும் மருத்துவம் பள்ளிக்குச் செல்ல உயர்மட்ட மேம்பாலம் அமைத்தது கொடுக்க வேண்டுமென பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனுக்கள் அளித்தும் இதுவரை இவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும் தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்தி தங்களுக்கு அன்றாட தேவைகள் மருத்துவம் மற்றும் கல்வி எளிதாக கிடைக்க உயர்மட்ட மேம்பாலம் உடனடியாக அமைத்துக் கொடுக்க வேண்டுமென அக் கிராம ப மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Views: - 274

0

0